புதன், ஜூலை 02, 2008

பழனி மலை முருகா!!

பழனிக்கு செல்லும் போது ....
இரண்டு நாளைக்கு முன்னாள் பழனிக்கு செல்ல பஸ்ஸில் சீட் பிடித்து டிக்கெட் எடுப்பதற்கு முன் திடீரென்று வீடியோ போட்டார்கள். அது தியேட்டர் effect கொடுத்தது. ஒரு மணி நேரம் அந்த sound கேட்டால் தலை வலியோடு தான் முருகனை தரிசிக்க முடியும் என்பதால் அடுத்த பஸ்ஸில் ஏறினேன்.

அந்த பஸ்ஸில் through டிக்கெட் மட்டுமே ஏற்றினார்கள். நல்ல விஷயம். என்ன... டிக்கெட் cost மூன்று ரூபாய் கூடுதல்.

மலை ஏறி டிக்கெட் கௌண்டரில் வரிசையில் நின்றேன். கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் செல் கையிலெடுத்து யாருடனோ பேசி கொண்டோ அல்லது கேம் விளையாடி கொண்டோ அல்லது போட்டோ எடுத்து கொண்டோ இருந்தார்கள். பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் மனைவியிடம் கூட பேசவில்லை போன் பேசினார்கள். எல்லாரிடமும் செல் இருந்தது.

என்ன இவன் பழனி மலை பற்றி சொல்வான் என்று பார்த்தால் வேறு ஏதேதோ சொல்கிறானே என்று நினைக்கிறேர்களா? பழனி மலை பற்றி பெரியவர்கள் நிறைய சொல்லி இருக்கிறார்கள் நான் practical ஆகா சொல்லி பார்த்தேன்.

மலைக்கு செல்பவர்கள் மாலை ஆறு மணிக்கு சென்றால் ராஜ அலங்காரம் பார்க்கலாம். தங்க தேர் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: