புதன், மே 28, 2008

மனம் விரும்புதே!

ஒரு காரியத்தை செய்ய நினைக்கிறோம்... உதாரணத்திற்கு ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறோம். உடனே மனத்திரையில் அந்த தொழில் செய்ய இருப்பதால் கிடைக்கபோகும் லாபத்தையும், புகழையும் பெருமைமிக்க வாழ்கையையும், சமூக அந்தஸ்தையும் ஓட விடுகிறோம். மனம் உற்சாகமாகி விடுகிறது. மேனியெங்கும் ஒரு வித பரபரப்பு நிலவுகிறது.
இப்படி தொடர்ந்து பிளஸ் பாயிண்டுகலையே நிகழ்த்தி கொண்டிருக்கும் மனமானது திடீரென்று ஒரு மைனஸ் பாயிண்டுக்கு சென்று விட்டால் போதும்... காற்றிறங்கிய பலூன் போல் முகம் தொங்கி போகிறது
உடனே மனமானது அந்த மைனஸ் பாயிண்டயே நினைத்து அந்த தொழில் மேல் வெறுப்பு பரவ வைக்கிறது. நாம் தான் சுதாரித்து கொண்டு மைனஸ் பாயிண்டை நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். இது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். அண்ணலும் இதை பற்றி நண்பர்களிடமோ மற்ற சகாகளிடமோ விவாதித்து முடிவு எடுப்பது நல்லது!!